பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ்(பிஎல்சி) கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், கடந்த பிப்ரவரியில் பிஎல்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், வரும் திங்களன்று (செப்.19) தன் கட்சியை பாஜகவில் முறைப்படி இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Categories