Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயல்வெளிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு….. எவ்வளவு செலவாகும்….??? விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி….!!!

டிரோன் மூலம் வயல்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டிரோன் மூலம் நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி தெளிப்பது என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது விளாம்பட்டி பகுதியில் இருக்கும் நெல் வயல்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்திகிராம வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை இயக்குனர் தமிழ்மணி ஆகியோர் கூறியதாவது, விளாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல் சாகுபடி அதிகமாக நடந்தும் பழ நோய் (எ) லட்சுமி வைரஸ் நோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.

நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆட்களை வைத்து அதிகமாக செலவு செய்து, நீண்ட நேரத்தை பயன்படுத்தி மருந்து அடிக்கின்றனர். இதனை சரி செய்யும் வகையில் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் டிரோன் மூலம் வயல்களில் எப்படி மருந்து தெளிப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயை கட்டுப்படுத்தி செடிகளுக்கு சேதாரம் இல்லாமல் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். டிரோன் மூலம் மருந்து தெளிக்க ஒரு ஏக்கருக்கு 600 முதல் 700 ரூபாய் வரை செலவாகிறது என கூறியுள்ளனர்.

Categories

Tech |