Categories
தேசிய செய்திகள்

இறந்து போன மகளின் உடலை…. 44 நாட்கள் உப்பில் வைத்து பாதுகாத்த தந்தை…. சோகம் நிறைந்த பின்னணி?….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21வயது பெண்ணின் உடலை அவரது தந்தை சென்ற 44 நாள்களாக உப்பிட்டு பாதுகாத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க, 2வது உடல் கூறாய்வு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த தந்தை தனது மகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு பதில், குழிதோண்டி அதில் உப்பைக் கொட்டி அதற்குள் உடலை வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணைக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டு அப்பெண்ணின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கென கடந்த வியாழக்கிழமையன்று பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த பெண் சென்ற ஆகஸ்ட் 1ம் தேதி மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை புகார் அளித்திருந்தார்.

எனினும் நந்துர்பார் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை எனகூறி, தற்கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு பெண்ணின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டி, தந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் நீதிகேட்டு போராடி வந்தனர். உடல்கூறாய்வு முடிந்து தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணின் உடலை குழிதோண்டி அவற்றில் உப்புகொட்டி அதற்குள் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில்தான் அப்பெண்ணின் உடலை மறு உடல்கூறாய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டு மும்பைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Categories

Tech |