40 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்ட உலகின் முதல் பறக்கும் பைக்கான XTURISMO ஹோவர் பைக் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது. ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹோவர் பைக் 300 கிலோ எடை கொண்டது. பைக்கின் முன்னும் பின்னும் 2 பெரிய பேன்களும் 4 புறத்திலும் சிறிய பேன்களும் உள்ளது. வழக்கமான எரிபொருளில் இயங்கும் எஞ்ஜின் கொண்ட இந்த பைக்கில் 4 பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன.
இது மணிக்கு 62 மைல் வேகத்தை எட்டும் எனவும் இதன் விலை 7,77,000 டாலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் டாலர் விலையில் இதே போன்ற அம்சங்கள் கொண்ட பறக்கும் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக AERWINS தகவல் தெரிவித்துள்ளது?