பீகார் ஜார்கண்ட் எல்லை பகுதி கிராமங்களில் ஒவ்வொரு திசைகளிலும் அந்தந்த கிராம மக்கள் கையில் கடியுடன் குடிமகன்கள் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிஹார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு இருப்பதால் அந்த மாநில கிராமங்களை சேர்ந்தவர்கள் அருகில் இருக்கும் ஜார்கண்டுக்குள் வந்து கிராமங்களில் இருக்கும் மதுபான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றார்கள். இதனால் தங்கள் கிராமங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் அதனை தடுப்பதற்கு பெண்களை களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். பீகாரிலிருந்து மதுவிற்கு அடிமையான ஆண்கள் எங்கள் கிராமத்திற்குள் நுழைவதால் பல இன்னல்கள் ஏற்படுகிறது.
இதனால் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் இதனை தடுப்பதற்கு பெண்களை தங்கள் கிராம பாதுகாப்பை கையில் எடுத்திருக்கின்றார்கள். இரவு பகல் பாக்காமல் பெண்களே தங்களுக்குள் குழு அமைத்து 24 மணி நேரமும் எல்லையில் கண்காணிப்பை மேற்கொள்கின்றார்கள். மது குடிக்க வரும் பீகார் குடிமகன்களை இங்கே மதுபானம் கிடைக்காது எனக் கூறி அவர்களே திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இது பெரிய அளவில் பெண்கள் கூட்டம் கையில் கம்புகளுடன் நிற்பதால் வேறு வழியில்லாமல் ஆண்கள் திரும்பி சென்று விடுவதாகவும் தற்போது கிராமத்தில் அமைதியாக வாழ்வதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றார்கள்.