Categories
தேசிய செய்திகள்

மகளை சந்திக்க வந்த காதலன்…. முகத்தில் மிளகாய் பொடியை தூவி வெளுத்து வாங்கிய தாய், மகன்….!!!

மகளின் காதலனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக தாக்குதல் நடத்திய தாய் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். புனேவில் சின்ச்வாட் பகுதியில் உள்ள போஷ் சொசைட்டிஅருகே கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்தப் பெண்ணின் மகளுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக பழகி வந்த விஷால் கஸ்பே, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் காதலியை சந்திக்க வந்துள்ளார்.அப்போது அவர் காதலியை சந்திப்பதற்கு முன்பு அவரின் தாயும் இரண்டு மைனர் சகோதரர்களும் வீட்டை விட்டு வெளியே வந்து அவரை விசாரிக்க தொடங்கினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. உடனே அந்தப் பெண் இளைஞரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மகன்கள் இருவரும் அந்த இளைஞரை கட்டையால் கொடூரமாக தாக்கினார் . அப்போது அருகில் இருந்த சிலர் அந்த இளைஞரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலையில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |