நடிகை கஸ்தூரி தற்போது உள்ள நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் செயல் பட ஆரம்பி விட்டார் என விமர்சனங்கள் எழுகிறது. ஆம், 80-களில் சினிமாவை ஆட்சி செய்தவர்களுள் முக்கிய பங்கு நடிகை கஸ்தூக்கும் உண்டு. அந்த அளவிற்கு நடித்து அசத்தியிருப்பார். சொல்லப்போனால் சத்யராஜ் நடித்த ‘அமைதிப்படை’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அதன் பின் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.
இவரது மகளுக்கு புற்று நோய் ஏற்பட்ட காரணத்தால் சினிமாவை விட்டு முற்றிலும் ஒதுங்கினார். 6 வருட போராட்டத்திற்கு பிறகு புற்று நோயில் இருந்து தனது மகளை காப்பாற்றினார். இதையடுத்து ஆள் அட்ரசே இல்லாமல் இருந்த நடிகை கஸ்தூரி தற்போது அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.