விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபாளையம் நகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இதனால் பெரும் அவுதி அடைந்து வருகின்றன. அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். நகரில் திட்டப்பணிகள் மிக மிக சுணக்கத்துடன் சரியான திட்டமிடுதல் இல்லாமல் நடந்து வருகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை .
இதனால் நகரில் சாலை சீரமைக்க கோரியும், திட்ட பணிகளை துரிதமாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நாளை ஒருநாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஒருநாள் போராட்டம் நடைபெற உள்ளது .