Categories
உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்….. அடுத்தடுத்து மரணம்….. கண்கலங்கும் சம்பவம்….!!!!

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த ஆறு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் செயல்படும் ஜின்னா முதுகலை மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாபுலில் வசிக்கும் ஹினா ஜாஹித் என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணிற்கு ஒரே நேரத்தில் நான்கு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆறு குழந்தைகளும் சுகப்பிரசவத்தின் மூலம் பிறந்தது. இந்த ஆறு குழந்தைகளில் பிறந்த தினத்தில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மற்ற ஐந்து குழந்தைகளும் நன்றாக இருந்தன.

நேற்று மாலை ஐந்து குழந்தைகளும் அடுத்தடுத்து மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தனர். எடை குறைவு மற்றும் மூச்சு திணறல் காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் தாய் ஹினா நலமாக உள்ளார்.

Categories

Tech |