தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ரூ. 400 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, நான் சினிமாத்துறையில் வந்த போது முதலில் நடித்த 4 படங்களில் என்னை யாருமே கண்டு கொள்ளவில்லை.
அதை மாற்றுவதற்கு நான் கடுமையாக உழைத்ததால் தான் இன்று உயர்ந்து இருக்கிறேன். நல்ல சினிமாவை யாரும் விட்டு விடாதீர்கள். புதிதாக சினிமாத்துறைக்குள் வரும் நடிகர்களிடம் என்னை விட சிறப்பாக என்ன இருக்கிறது என்பதை நான் கவனிப்பேன். அதை நான் பல சமயங்களில் உணர்ந்து என்னுள் அடக்கம் செய்து கொள்வேன். இன்று வரை நான் கடுமையாக உழைக்கிறேன். அதனால்தான் என் ஆயுள் நீட்டிக்கொண்டே செல்கிறது. இந்த வாழ்த்தை தொடர்ந்து நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.