Categories
சினிமா தமிழ் சினிமா

“அட்லீ இயக்கத்தில் ஜவான்” 200 முதல் 250 பெண்கள் பங்கு பெறும் பிரம்மாண்ட சண்டை காட்சி…. வெளியான புதிய அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கௌரி கான் தயாரிக்கிறார். இப்படம் வருகிற 2023-ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்டமான செட் அமைத்து நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், படத்தின் சண்டைக் காட்சிகளை மிக பிரம்மாண்டமாக படமாக்குவதற்கு பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த சண்டைக் காட்சியில் 200 முதல் 250 பெண்கள் பங்கு பெறுவார்கள் எனவும் சண்டை காட்சிகள் ஒரு வாரம் வரை படமாக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |