Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பக்கத்து வீட்டைக் குறித்து…. புகாரளித்தால் பரிசு…. பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரம்….!!

சுவிட்சர்லாந்தில், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டை வெப்பப்படுத்துவதற்கு அதிக வெப்பத்தை பயன்படுத்துகிறார்களா?உடனே தகவல் கொடுங்கள், உங்களுக்கு 200 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசாக வழங்கப்படும் என்று கூறும் விளம்பரங்கள் சில, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

குறிப்பாக ரஷ்யாவால் இயக்கப்படும் டெலிகிராம் சேனல்கள் மற்றும் பெலாரஸ் தொலைக்காட்சி செய்திகளில் இப்படிப்பட்ட விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இது உண்மையில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அத்துடன், இந்த போலிச் செய்தியின் பின்னணியில் ரஷ்யா உள்ளதா என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |