தேமுதிக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, இன்னைக்கு ஆட்சி முடிஞ்சு, அவங்க வீட்ல ஓய்வில் இருக்கிற ( அதிமுக ) மந்திரிகள் வீட்டுக்கு எதுக்கு நீங்க வந்து ரைடு அனுப்புறீங்க ? அதுவும் ஒரே மாதிரி வீட்டுக்கு பத்து வாட்டி . அவர்களை உத்தமர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையில் நீங்கள் உத்தமர்களாக இருந்தால், உங்கள் மந்திரி வீட்டிற்கு முதலில் ரைடு அனுப்பி, இந்த ஆட்சி ஒரு சுத்தமான ஆட்சி என்பதை மக்களுக்கு நிரூபியுங்கள்.
உயர்கல்வித்துறை மந்திரி திரு.பொன்முடி அவர்கள். எப்படி அவரு உயர்கல்வித்துறை மந்திரியா ஆனார் என்று எனக்கு நிச்சயமாக தெரியல.ஏன்னா இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பக்கத்திலேயே கஞ்சா, போதை பொருள் விற்பது தமிழ்நாட்டில் ரொம்ப அதிகமா ஆகிவிட்டது. இதை தடுத்த வேண்டிய அரசு அதற்கு காரணத்தை சொல்லுது. இதற்கு காரணம் மத்திய அரசுதான் என்றும், அங்கிருந்துதான் வந்து கஞ்சா கடத்தப்படுது அப்படின்னு சொல்லுறாங்க.
அப்போ உங்களுக்கு தமிழ்நாட்டினுடைய எல்லை என்று எதுக்கு இருக்கு ? எதுக்கு டோல் கேட்ஸ் இருக்கு ? அப்போ எதுக்கு செக் போஸ்ட் இருக்கு ? எதுக்கு காவல்துறை என்று முதலமைச்சரின் கையில் இருக்கு ? அவங்க என்ன பண்றாங்க ? பொன்முடி சொல்லுறாரு, ஆந்திராவில் வைசாக்கில் இருந்து தான் கஞ்சா கடத்தறாங்களாம், வைசாக்கில் ஹார்பரரே கிடையாது.
விசாகப்பட்டினத்தில் தான் ஹார்பர் இருக்கு. விசாகப்பட்டினத்திற்கு வைசாக்கும் எந்த ஒரு வித்தியாசம் தெரியாத ஒரு மந்திரி தான் இந்த நாட்டினுடைய உயர்கல்வி மந்திரியாக இருக்கார். அந்த அளவுக்கு அவருக்கு அறிவு இருக்கு. உங்களால் என்ன முடியும் என்று சொல்லுங்கள் ? என்றால், உடனே மத்திய அரசு மேல பழியை போடுவது. உங்களால் என்ன முடியும் என்று சொல்லுங்கள் ? என்றால், உடனே போன ஆட்சியில் இதெல்லாம் செய்யலன்னு சொல்லுறாங்க. அதுக்கு தான மக்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க, சொல்லுங்கன்னு கேட்டா, அதுக்கு பதில் இல்ல என விமர்சனம் செய்தார்.