பிரிட்டன் மகாராணியாரின் மறைவால் பிரபல சாக்லேட்டின் உரையில் மாற்றம் ஏற்படவுள்ளது.
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைந்த நிலையில் பிரபல சாக்லேட் நிறுவனம் ஒன்று முக்கிய மாற்றத்தை உருவாக்க உள்ளது. அது யாதெனில் பிரிட்டனின் பிரபலமான கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டின் உறையில் பிரிட்டன் மகாராணியாரால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்களும் ராஜ முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முத்திரையை இனி கேட்பரி நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.
தற்போதைய மன்னரான மூன்றாம் சார்லஸ் முறைப்படி விண்ணப்பித்து அவரால் அங்கீகரிக்கப்பட்ட புதிய முத்திரை மற்றும் எழுத்துக்களை பொறிக்க வேண்டி இருக்கும். இந்த மாற்றமானது கேட்பரி சாக்லேட் நிறுவனத்திற்கு மட்டுமின்றி மொத்தமாக 876 பொருட்களுக்கு இதேபோல ராஜ முத்திரையும் வழங்கப்பட உள்ளதால் அவர்களும் தங்களுடைய தயாரிப்பில் இந்த திடீர் மாற்றத்தை செய்ய வேண்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.