முதன் முதலாக மகாராணியாரின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் அவரின் இறப்பு மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1982 ஆம் ஆண்டு மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் படுக்கை அறைக்குள் ஃபாகன் என்பவர் அத்துமீறி நுழைந்துள்ளார். ஆனால் அந்த நபரை ராணியார் பொறுமையாகவும் அன்பாகவும் நடத்தியுள்ளார். இந்நிலையில் ஃபாகன் ராணியாரின் மறைவு குறித்து கூறியதாவது “ராணியாரின் படுக்கையறைக்குள் நுழைந்த நான் திரைகளை விளக்கிய போது அவர் கண் விழித்துக் கொண்டார்.
அதன் பின்னர் அவர் என்னை அமரச் செய்து என் குடும்பம் தொடர்பாக பத்து நிமிடங்கள் பேசினார். மேலும் அரண்மனை ஊழியர் ஒருவரிடம் தனக்கு தேவையான மது அளிக்கவும் ஏற்பாடு செய்தார். இதனை நான் எப்போதும் மறக்க மாட்டேன். எனக்கு இப்போது 74 வயதாகிறது. ராணியாரின் மறைவு எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. ராணியாரின் இறுதிச் சடங்கிற்கு நான் செல்லப் போவதில்லை. ஆனால் அவர் நினைவாக நான் தேவாலயத்திற்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்ற உள்ளேன். இது தொடர்பாக நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.