சிம்பு குறித்து சித்தி இட்ஞானி பேட்டி ஒன்றில் கூறியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் சிம்பு நடிப்பில் செப்-15 வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் சித்தி இட்ஞானி. படத்தைப் பார்த்த பலரும் இவரின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் சிம்பு குறித்து பேட்டி ஒன்றில் பேசியது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டும் என்றால் யாருக்கு கொடுப்பீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அனைவருக்கும் தெரியும் தமிழகத்தின் தகுதியான பேச்சுலர் சிம்பு தான். ஆகையால் காதல் ரோஜாக்களை அவரிடம் தான் கொடுப்பேன். சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும். அவருக்கான ஜோடி விரைவில் அவரை வந்து சேர வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.