பணம் கொடுத்து தான் ஏமாந்து போனது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் பிக் பாஸ் ஜூலி.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக பங்கேற்றார் ஜூலி. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தற்பொழுது அவர் படம், சீரியல், விளம்பரம், யூடியூப் சேனல் என பிசியாக வலம் வருகின்றார்.
இந்த நிலையில் அண்மையில் பிரபல நிறுவனத்திடம் ஏமாந்து போன கதையை நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, லண்டனில் நர்ஸ் வேலை பார்ப்பதற்காக மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் மூன்று லட்சம் கொடுத்தேன். ஆனால் அந்த நிறுவனம் வேலை வாங்கித் தராமல் என்னை ஏமாற்றி விட்டது என கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.