தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதற்காகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்திட புதிதாக 151 பணியிடங்கள் உருவாக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட அளவில் தொடக்க பள்ளிகளுக்கு என தனியாக கல்வி அலுவலர் பணியிடம், தனியார் பள்ளிகளை கண்காணிக்க துணை இயக்குநர் பதவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், கல்வியியல் ஆராய்ச்சி இயக்கத்திற்கு தனியாக 2 இணை இயக்குநர் பதவிகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு 16 தனி உதவியாளர் பதவிகள் உருவாக்கப்படுகின்றன.