நாடு முழுவதும் 8,700 க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஜெனரிக்கு மருந்துகள், மாத்திரைகள் அதே மருந்து கொண்ட கம்பெனி மாத்திரைகளின் விலையை விட மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் டைப் 2 நீரழிவுக்கு சிடாக்லிப்டின் என்ற மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த மாத்திரைகள் மக்கள் மருந்தகங்களிலும் கிடைக்கும். ஐம்பது மில்லி கிராம் கொண்ட பத்து சிடாக்லிப்டின் பாஸ்பேட் மாத்திரைகள் அடங்கிய அட்டை 60 ரூபாய்க்கு விற்கப்படும்.
100 மில்லி கிராம் கொண்ட மாத்திரை அட்டையின் விலை ஆனது 60 ரூபாய்ககு விற்கப்படும். 100 மில்லி கிராம் சிடாக்லிப்டின் மற்றும் மெட்பார்மிங் ஹைட்ரோ குளோரிக் இணைந்த கலவை மாத்திரைகள் 65 மற்றும் 70 ரூபாய்க்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதே மருந்து கொண்ட இந்த கம்பெனி மாத்திரைகள் 162 முதல் 258 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.