Categories
உலக செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு… மீண்டும் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி…!!!!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் எட்டு நாடுகள் நிரந்த உறுப்பினர்களாக இருக்கின்றனர். 2001 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்,இந்தியா,பாகிஸ்தான் போன்ற எட்டு நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் சாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே உஸ்தகீஸ்தான் நாட்டின் சமர்கன் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று நடைபெற்றுள்ளது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த நிலையில் இந்த மாநாட்டிற்கு பின் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் துருக்கி அதிபர் போன்ற பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்று விட்டு இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி சமர் கன் நகரில் இருந்து விமானம் மூலமாக நள்ளிரவு புறப்பட்ட அவர் அதிகாலை இந்தியா வந்தடைய இருக்கின்றார்.

Categories

Tech |