Categories
ஆன்மிகம்

“வெங்கடகிரியில் போலேரம்மன் திருவிழா” திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

வெங்கடகிரியில் நடைபெற்ற போலேரம்மன் திருவிழாவை முன்னிட்டு காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, திருப்பதி தொகுதி எம்.பி. டாக்டர் குருமூர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு உள்பட பலர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

அப்போது சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கூறியதாவது, அடுத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் வெங்கடகிரி போலேரம்மன், சூலூர்பேட்டை செங்காளம்மன், திருப்பதியில் உள்ள தாதய்யகுண்டா கங்கையம்மன், கனுபூரில் உள்ள முத்தியாலம்மனுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு சார்பில் சீர்வரிசை பொருட்களை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |