Categories
Uncategorized உலக செய்திகள்

மக்களே உஷார் – இலங்கை அரசு எச்சரிக்கை

கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்து ஆயுர்வேத சுகாதார மருத்துவ அதிகாரியிடம் இருந்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இப்போதுள்ள காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் பணியாளர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி சஞ்சீவினி சில்வா அறிவுறுத்தியுள்ளார். கடும் வெயில் ஆனது காலை 11 மணி முதல் 3 மணி வரை வெப்பத்தை கொட்டித் தீர்க்கிறது. எனவே உடலை பாதுகாத்துக் கொள்ள அதிகமாக வியர்வையை ஏற்படுத்தும் பணிகளை செய்யாமல் இருப்பது நன்று.

பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமின்றி சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும் இந்த எச்சரிக்கையான பொருந்தும். பள்ளியில் குழந்தைகளை விளையாட அனுப்பும் பொழுது நிழலில் மட்டுமே நின்று விளையாட வேண்டும் என அறிவுறுத்துவது அவசியம். இன்னும் இரண்டு மாதங்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் உடலில் உள்ள சூட்டை குறைப்பதற்கு அதிக நீர் பருக வேண்டும். நீர் மட்டுமன்றி  உடலின் சூட்டை தன்மையாக்கும் பானங்களையும் அருந்தலாம். கூடுமானவரை பழத்தினால் செய்யப்பட்ட குளிர்ந்த பானங்களை அருந்துவது உடலுக்கு நன்மையை கொடுக்கும்.

இந்த காலகட்டத்தில் கூடுமானவரை குழந்தைகளைப் போன்று பெரியவர்களும் கவனத்துடன் சுத்தமான நீரைப் பயன்படுத்தி அவர்களது உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |