Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் கோரம்”… நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை, 1,868 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 72 ஆயிரத்து, 436 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில், வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் அந்நாட்டின், 34 மாகாணங்களில் 31 மாகாணங்களை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக  ஹூபய் மாகாணத்தில் இருக்கும் 18 முக்கிய நகரங்களில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் தான் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,868 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக, 1,888 பேருக்கு வைரஸ் தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 72,436 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் திடீரென சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரியவந்தது.

மனிதா்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கொரோனா வைரஸ்’ வகையைச் சோ்ந்த அந்த காய்ச்சல், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரின்  உயிா்களை காவுவாங்கிய ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையுடன் ஒத்துபோவதாக விஞ்ஞானிகள் அறிவித்தனா்.

ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு , அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக கடந்த மாத இறுதியில் அறிவித்தது. மேலும் ‘கொரோனா வைரஸ்’ என்று அனைவராலும் பொதுப் பெயரில் அதுவரை அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கோவைட்-19’ வைரஸ் என்று அந்த அமைப்பு கடந்த வாரம் பெயரிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |