Categories
மாநில செய்திகள்

நடுக்கடலில் கப்பல் கூட்டுப் பயிற்சி…. வரும் 19 ஆம் தேதி…. வெளியான தகவல்….!!!!

கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் கடலோர காவல்படை கப்பலான மிட்ஜெட் 757 கடந்த நேற்று சென்னைத் துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை சென்னைக்கு அருகில் நடுக் கடலில் கூட்டுப்பயிற்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அமெரிக்க கடலோரக் காவல் படையில் பணிபுரிந்து மறைந்த துணை தளபதியான ஜான்ஆலன் மிட்ஜெட்டின் நினைவாக மிட்ஜெட்-757 என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும், நல்லெண்ணப் பயணமாகவும் வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதா் ஜூடித்ரேவின் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை உயா் அதிகாரிகள் கப்பலையும், குழுவினரையும் வரவேற்றனா். அதன்பின் 4 நாட்கள் இந்திய அமெரிக்க கடலோரக் காவல்படையினா் இடையில் பரஸ்பர பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு, கடல்சாா் விழிப்புணா்வு, இந்தோபசிபிக் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல பாதுகாப்பு, ஒழுங்காற்று உத்திகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. இறுதிநாளான வரும் 19ம் தேதி சென்னைக்கு அருகில் நடுக்கடலில் கூட்டுப்பயிற்சி மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

Categories

Tech |