சுவை மிகுந்த மற்றும் குழந்தைகள் விரும்பிடும் பன்னீர் 65 செய்வது பற்றி இந்த தொகுப்பு
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
தயிர் – 2 மேசைக்கரண்டி
சோள மாவு – 2 மேசைக் கரண்டி
மைதா மாவு – 4 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
வத்தல்பொடி – 2 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- முதலில் பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- பெரிய பாத்திரம் ஒன்றில் சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், வத்தல் பொடி, மைதாமாவு, எலுமிச்சைச்சாறு, கரம்மசாலா தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
- கரைத்து வைத்துள்ள மாவில் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள பன்னீரை நன்றாக நன்றாக போட்டு மாவு பன்னீரில் படும்படி போட்டு வைக்கவும்.
- பின்னர் அடுப்பில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் போட்டு வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எண்ணெயில் போடவும்.
- பன்னீரின் இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்து விடவும்.
- இப்போது சுவைமிக்க பன்னீர் 65 தயாராகிவிட்டது.