Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. வித்தியாசமான தோற்றத்தில் நடிகை அஞ்சலி….. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்….!!!!

தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற அஞ்சலி தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழிகளின் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நாடோடிகள் 2 மற்றும் நிசப்தம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது, சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் பால் என்ற ஃவெப் தொடரில் நடித்துள்ளார். இது வெர்டிஜ் எனும் கனேடிய வெப் தொடரின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில்‌ ஃபால் வெப் தொடரில் பூர்ணிமா பாக்யராஜ், தலைவாசல் விஜய், நமிதா கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் பிரதாப் மற்றும் சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் ஒரு இளம் பெண் தான் மறந்து போன சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்துவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |