Realme நிறுவனம் “Realme பெஸ்டிவ் டேஸ்” சிறப்பு விற்பனையில் Realme நிறுவன smartphone, laptop மற்றும் இதர சாதனங்களுக்கு ரூ. 16,000 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Realme GT நியோ 3T ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வருகிறது. Realme நடத்தும் சிறப்பு விற்பனை செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்பு விற்பனை Realme ஆன்லைன் ஸ்டோர், Flipkart மற்றும் Amazon வலைதளங்களில் நடைபெறுகிறது. இதே தேதியில் தான் Flipkart தளத்தில் “பிக் பில்லியன் டேஸ் 2022” மற்றும் Amazon தளத்தில் “அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2022” விற்பனைகள் துவங்க உள்ளது.
Realme பெஸ்டிவ் டேஸ் சேல் விற்பனை செப்டம்பர் 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது. Realme GT நியோ 3T ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனையில் ரூ. 7,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனைக்கு வருகிறது. முந்தைய தகவல்களில் இந்த சலுகையுடன் சேர்க்கும் பட்சத்தில் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக Realme GT நியோ 3T இருக்கும் என கூறப்பட்டது. இது தவிர Realme GT 2 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.