Categories
உலக செய்திகள்

“ஐக்கிய ராஜ்ய வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த ஒற்றை நாள்”… எலிசபெத்தின் இறுதி சடங்கு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலமாக அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் ராஜ மரியாதை உடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டமாக திரண்டு வருகின்றார்கள். இதனை அடுத்து வருகின்ற 19ஆம் தேதி அன்று ராணியின் உடல் கடந்த வருடம் மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய ராஜ்யத்திற்கு வருகை தர இருக்கின்றார்கள்.

இந்த சூழலில் நியூயார்க் போஸ்டின் கூற்றுப்படி ராணி எலிசபெத் இறுதி சடங்கை பாதுகாப்பது ஐக்கிய ராஜ்ஜிய வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த ஒற்றை நாள் நடவடிக்கையாகும். இதற்காக சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக செலவாகும் என கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்தில் வரும் திங்கள்கிழமை அன்று நடைபெறும் இறுதி சடங்கில் இதுவரை எதிர்பாக்காத அளவில் வெளிநாட்டு தலைவர்களை பாதுகாக்க பிரிட்டிஷ் எம் ஐ 5 மற்றும் எம்ஐ 6 உளவுத்துறை நிறுவனங்கள் லண்டனில் பெருநகர காவல் துறை மற்றும் ரகசிய சேவை போன்றவை இணைந்து செயல்படும். மேலும் இங்கிலாந்து காவல்துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும் மற்ற நிகழ்வுகளை பார்க்கும்போது இது பெரும் சவாலாகும் என கருதப்படுகின்றது. கடந்த 2011 இல் இளவரசர் மற்றும் வேல்ஸ் இளவரசர் திருமண செலவு அதிகமாக இருந்துள்ளது. ஆனால் இந்த பாதுகாப்பு செலவை ஒப்பிட முடியாது வில்லியம் மற்றும் கேத்தின் 2011 திருமணத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்துள்ளது. திருமணத்திற்கான காவல்துறை செலவுகள் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என முன்னாள் ராயல் பாதுகாப்பு அதிகாரியான சைமன் முருகன் கூறியுள்ளார் சுமார் 7.5 லட்சம் பேர் இறுதி சடங்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |