Categories
சினிமா

நடிகர் பிரபாஸ்-அனுஷ்கா திருமணம் எப்போது?…… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நடிகை அனுஷ்காவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து இருப்பதாகவும் திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும், இதற்காக அங்கு பங்களா வீடு கட்டி உள்ளதாகவும் ஏற்கனவே பல தடவை கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தது. இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இவர்கள் காதலிப்பதாக வெளியான வதந்தியில் கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்று சிலர் பேசி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்த பிரபாஸின் பெரியப்பாவும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணராஜும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பிரபாசுடன் நேரில் சென்று அனுஷ்கா பார்த்த புகைப்படம் வெளியானது. மேலும் கிருஷ்ணராஜ் மரணம் குறித்து வலைதளத்தில் உருக்கமான பதவையும் அவர் பகிர்ந்தார். அனுஷ்கா பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணாஜும் விரும்பியதாக கூறப்படுகிறது.

Categories

Tech |