Categories
உலக செய்திகள்

ஆர்மீனியா அஜர்பைஜான் எல்லை விவகாரம்… ரஷ்யா போதுமான ஆதாரங்களை கொண்டிருக்கிறது… புதின் கருத்து….!!!!

ஆர்மினியா அஜர்பைஜான் எல்லையில் 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாகோனா காராபாக் மலைப்பகுதி தான் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என மோதல் நிலவி வருகிறது. 30 வருடங்களுக்கும் மேலாக சர்ச்சை நிலவுகிறது. 1998 ஆம் வருடம் நடைபெற்ற எல்லை போரில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின் 1994 ஆம் வருடம் போர் முடிவுக்கு வந்துள்ளது. மலை பகுதி அஜர்பை ஜான் நாட்டின் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் ஆர்மினியா நாட்டு ஆதரவாளர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இந்த பகுதி இருக்கிறது. இந்த நிலையில் 2016 ஆம் வருடம் முதல் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே எல்லை விவகாரம் தொடர்பாக சண்டை எழுந்துள்ளது. 2020 வருடம் அது போறாக மாறி உள்ளது அப்போது ரஷ்யா அதில் தலையிட்டு அமைதுக்கு வழி வகுத்துள்ளது.

மேலும் அந்த போரில் 60,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் இந்த வாரம் அஜர்பைஜான் படைகள் ஆர்மீனியாவிற்குள் உள்ள குடியிருப்புகளை தாக்கி கைப்பற்றியதாக ஆர்மீனியா தெரிவிக்கிறது. மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. ஆர்மீனியா அஜர்பைஜான் சந்தையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன் சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பை இந்த விவகாரத்தில் தலையிடுமாறு ஆர்மீனியா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த அமைப்பு ஒரு உண்மையை கண்டறியும் குழுவை மட்டுமே அந்த பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இதற்கு ஆர்மீனிய அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. மேலும் ரஷ்யா மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது ரஷ்யா ஆர்மீனியாவின் ராணுவ கூட்டாளி ஆகும். இது அஜர்பைஜானுடன் நட்புறவுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புதின் ஆர்மீனியா அஜர்பைஜான் முதலில் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றார். ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையேயான முதலில் சமாதானம் ஏற்படுத்த ரஷ்யா போதுமான ஆதாரங்களை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |