தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படம் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிம்புவின் நடிப்பு, ஏ.ஆர். ரகுமானின் இசை, கௌதம் மேனனின் இயக்கம் என அனைத்தும் சிறப்பாக படத்தில் அமைந்துள்ளது.
ரசிகர்கள் இப்படத்தை விழா கோலமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் திரைபிரபலங்கள் பலரும் படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சிம்பு பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “நான் காட்டுப் பசியில் இருக்கிறேன்.அதனால் திரைப்பட கதைகள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். அதிக கதைகள் வருகிறது. இருப்பினும் என்னுடைய காட்டுப் பசிக்கு தீனி போடும் வகையில் வரும் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று பேசினார்.