Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் பன்றி காய்ச்சல்…. பள்ளிகளுக்கு விடுமுறை….. ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பன்றி காய்ச்சல் எனப்படும் ஏற்று எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தையை அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு புறம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவியது என்பதை கண்டறிவதற்கு சோதனையோ, நோய்தடுப்பு நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை.

இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ செய்து விடும். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் எந்தெந்த பகுதியில் என்னென்ன வகையான காய்ச்சல் பரவுகின்றன? நோய் தாக்கங்களினால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும். இதனையடுத்து குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் மூலம் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவதாக தோன்றுகிறது. எனவே குழந்தைகளை காக்கவும், நோயை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |