Categories
மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்… ஓய்வூதிய வயதை அதிகரிக்க அரசு திட்டம்… இந்த தேதி முதல் அமலுக்கு வரும்…?

ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கமான ஒன்றாகும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் மூத்த குடிமகனின் வயது அதிகரித்து வருவதனால் ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ பி எஃப் ஓ பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலமாக ஓய்வூதிய சிஸ்டத்தின் சுமையை கணிசமாக குறைக்க முடிகிறது என epfo கருதுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலமாக அரசு மற்றும் ஊழியர்களுக்கு பலன் கிடைக்கும்  என்றும் இதன் காரணமாகத்தான் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதிகபட்சமாக இந்தியாவில் 2047 ஆம் வருடத்திற்குள் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமகனின் எண்ணிக்கை 140 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக ஓய்வூதிய நிதி மீதான அழுத்தம் அதிகமாக அதிகரிக்கும் என்று கருதப்படுகின்றது. மேலும் மற்ற நாடுகளில் பணியில் இருந்து ஓய்வு பெறுவோரின் வயது 67 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது பற்றி அதிகாரி ஒருவர் பேசும் போது இப்போது பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் பட்சத்தில் ஓய்வூதிய நிதியில் பணியாளர்கள் அதிக பணம் டெபாசிட் செய்வார்கள் அதன் மூலமாக பணியாளர்களும் அதிக பலனை பெறுவார்கள் என கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் ஓய்வு பெறுவதற்கான அதிகபட்ச வயது 58 முதல் 65 வரை உள்ளது. இந்த ஓய்வு பெறும் வயது வரம்பானது அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்துகிறது. இதை தவிர ஐரோப்பிய யூனியனில் சராசரியாக ஓய்வு பெறும் வயது 65 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் டென் மார்க், இத்தாலி மற்றும் ஐரோப்பியாவின் கிரீஸ் நாடுகளில் ஓய்வு பெறும் வயது 67 ஆகவும் அமெரிக்காவில் 66 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |