பெண்களுக்கான முக்கியமான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. பெண்களை மனதில்வைத்து ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புது அறிவிப்பின்படி “பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் போல இந்திய ரயில்வேவும் பெண்களுக்காக இனி இருக்கைகளை ஒதுக்கும். தற்போது இந்திய ரயில்வே வாயிலாக நீண்டதூர பயணம் போகும் ரயில்களில் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து பெண்களின் பாதுகாப்புக்காகவும் ஒரு திட்டம் தயாரிக்கப்படுகிறது.
பெண்களின் வசதிக்காக ரிசர்வ்பெர்த் வசதியை உருவாக்கிய போது இன்னும் பல்வேறு வசதிகளையும் தொடங்கியுள்ளதாக இரயில்வே அமைச்சர் கூறினார். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பில் பெண்களுக்கு 6பெர்த்கள் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார். ராஜ்தானி எக்ஸ்பிரஸ், கரீப் ரத் மற்றும் துரந்தோ உள்ளிட்ட முழு குளிரூட்டப்பட்ட விரைவு ரயில்களில் 3வது ஏசி வகுப்பில் (3ஏசி வகுப்பு) 6 பெர்த்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயிலின் ஒவ்வொரு ஸ்லீப்பர் பெட்டியிலும் (Sleeper Class) 6 கீழ் பெர்த்களும் (Lower Berths), 3 டயர் ஏசி பெட்டியில் 4-5 கீழ் பெர்த்களும், 2 டயர் ஏசியில் 3-4 லோயர் பெர்த்களும், மூத்தகுடிமக்கள் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ரயில்வே பாதுகாப்புப்படை (ஆர்பிஎஃப்) ஜிஆர்பி மற்றும் மாவட்ட காவல்துறை பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவார்கள். இது தவிர்த்து ரயில்கள் மற்றும் நிலையங்களில் பெண்கள் உட்பட பிற பயணிகளுக்காக ஜிஆர்பி உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.