Categories
அரசியல் மாநில செய்திகள்

நடப்பாரு…. கை கொடுப்பாரு… டீ குடிப்பாரு… போஸ் கொடுப்பாரு… ஸ்டாலின் பின்னாடி 10 கேமரா …!!!

தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கெஜ்ரிவால் குஜராத்தில் போட்டியிடுவதற்கு தயாராகிட்டு இருக்காரு. அவரு குஜராத்தில் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்காரு. முன்னூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று சொல்லி இருக்காரு. திரு.செந்தில் பாலாஜி அவர்களே கெஜ்ரிவாலை அழைச்சுட்டு, நிகழ்ச்சி நடத்துனீங்க இல்ல… 300 யூனிட் இலவசமா எப்படி கரண்ட் கொடுக்க முடியும்னு ?

முதல்ல நீங்க அவங்க கிட்ட போய் கிளாஸ் எடுங்க. அதுக்கப்புறம் கெஜ்ரிவாலை கூப்பிட்டு இங்கே நிகழ்ச்சிகளை நீங்க நடத்துங்க. அதெல்லாம் கேட்க மாட்டாங்க, சும்மா கூப்பிட்டு ”ஒரு சீன்” . இன்னைக்கு என்ன ஆட்சியா நடந்துகிட்டு இருக்கு ? சும்மா போக்கஸ் ஆச்சு. பின்னாடியே பத்து கேமரா போகும், இவர் நடப்பாரு. அப்படியே கை கொடுப்பாரு. ஃபோட்டோ எடுப்பாரு. ஏன்னா அவரு சினிமால நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசையாம் முதலமைச்சருக்கு.

அந்த ஆசையெல்லாம் இப்பதான் நிறைவேற்றிக் கொண்டு இருக்காரு. கோர்ட் சூட் போர்த்துக்கிட்டு, பேண்ட் போட்டுக்கிட்டு, ஒரு போட்டோ ஷூட் ஆட்சி தான் இன்னைக்கு நடந்துகிட்டு இருக்கு. எக்ஸர்சைஸ் பண்ணுற மாதிரி, நடக்குற மாதிரி, டீ குடிக்கிற மாதிரி, இதையெல்லாம் மக்கள் பார்த்து அழுத்துட்டாங்க.  மக்களுக்கு வேண்டியது என்ன ? அவர்களது வாழ்க்கையை செம்மையா மாத்துங்க. லஞ்சம் – ஊழல் இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

படித்த பிள்ளைங்க வேலையில்லாமல் கஷ்டப்படுறாங்க, இன்னைக்கு டாஸ்மார்க் இல்லாத ஒரு தமிழ்நாட்டை கேக்குறாங்க, விவசாயம் சிறப்பதற்கு,  நதி நீரை கேட்கிறாங்க, இலவசமாக கல்வி, இலவச மருத்துவம் இதைத்தான் மக்கள் கேட்கிறாங்க. டீ குடிக்கிறதையும், நடக்கிறதையும், டாட்டா காட்டுதையும் யாரும் பாக்கல. இது எல்லாம் மக்கள் பார்த்து அழுதுட்டாங்க. கிழியாத சட்டையை கிழிச்சுகிட்டு எதிர்க்கட்சியா இருந்த போது போஸ் கொடுத்தாரு என தெரிவித்தார்.

Categories

Tech |