Categories
அரசியல் மாநில செய்திகள்

இதெல்லாம் வெட்கக்கேடு..! C.M டாட்டா காட்டுறாரு… DMK வெற்றி சிக்ரெட் சொன்ன பிரேமலதா ..!!

தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், படித்த பிள்ளைங்க வேலையில்லாமல் கஷ்டப்படுறாங்க, இன்னைக்கு டாஸ்மார்க் இல்லாத ஒரு தமிழ்நாட்டை கேக்குறாங்க, விவசாயம் சிறப்பதற்கு,  நதி நீரை கேட்கிறாங்க, இலவசமாக கல்வி, இலவச மருத்துவம் இதைத்தான் மக்கள் கேட்கிறாங்க. டீ குடிக்கிறதையும், நடக்கிறதையும், டாட்டா காட்டுதையும் யாரும் பாக்கல. இது எல்லாம் மக்கள் பார்த்து அழுதுட்டாங்க.

கிழியாத சட்டையை கிழிச்சுகிட்டு எதிர்க்கட்சியா இருந்த போது போஸ் கொடுத்தாரு, இப்போ முதலமைச்சராகி விட்டதால் கோட்டு சூட்டு போட்டுகிட்டு,  போட்டோ சூட் பண்ணிக்கிட்டு இருக்காரு. அதனால நீங்க A.M, P.M  C.M இல்ல. போட்டோ சூட் C.M  என்று மக்கள் சொல்லக்கூடிய நிலைமை தான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

உள்ளாட்சி தேர்தல்ல கோயமுத்தூருக்கு தான் நான் எல்லா தேர்தலுக்கும் போயிருந்தேன். அங்க இருக்கவங்க சரியா வேலை பார்க்கவில்லை என்று செந்தில் பாலாஜியை கொண்டு வந்து,  அங்க பொறுப்பாளராக்கி, வீடுக்குவீடு  டிபன் பாக்சில் காசு போட்டு, கொலுசு என என்னென்ன கொடுக்கணுமா கொடுத்து, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று வெட்கக்கேடான உள்ளாட்சித் தேர்தல் தான் அந்த தேர்தல் என்பதை இந்த நேரத்தில் நான் சொல்ல விரும்புகிறேன்.

இது எல்லாம் ஒரு வெற்றியா ? எத்தனை நாளைக்கு இப்படி மக்களை ஏமாற்றி, பெரும் வெற்றியை  நாங்க பெற்றுவிட்டோம் எனறு நீங்க சொல்ல போறீங்க ? எல்லாம் மாறும்,  மாற்றம் ஒன்றுதான் இங்கு உறுதியானது என்பதை மக்கள் நிச்சயம் நிரூபிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |