ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டம் பாபாவார் கிராமத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தன்னுடைய சகோதரியை 21 வயது வாலிபர் காதலிப்பதாக நினைத்துள்ளார். இதனால் அந்த வாலிபரை 16 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோடா மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனுக்கு தற்போது 19 வயது ஆனதால், 21,000 ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.