சூரரைப்போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவர் நடிகை அபர்ணா பாலமுரளி. அந்த திரைப்படம் வெளிவந்த நேரத்திலேயே அதை பார்த்த ரசிகர்கள் கட்டாயம் சூர்யா மற்றும் அபர்ணாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறினர்.
அதேபோன்றே அவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தநிலையில் அபர்ணா வாங்கியுள்ள புது மெர்சிடஸ் பென்ஸ் காரின் புகைப்படங்களானது இப்போது வெளியாகி உள்ளது.