பிரித்தானிய ராணியார் இறந்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது உடல் கெடாது பேணப்படுவதன் ரகசியம் தற்போது கசிந்துள்ளது.
பிரித்தானிய ராணியார் 2-ம் எலிசபெத்தின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ச்டர் ஹாலில் வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எதிர்வரும் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணி வரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதனை அடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும். இந்நிலையில், மகாராணியார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பல நாட்கள் வைத்திருப்பது எவ்வாறு என பலர் தங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இதற்கு தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான தகவலின் அடிப்படையில், மகாராணியாரின் சவப்பெட்டியானது ஈயம் பூசப்பட்டது எனவும், இதனால் அனைத்தும் அப்படியே கெடாது பேணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈயம் பூசப்படும் பெட்டியில் வைக்கப்படும் உடல்கள் ஓராண்டுக்கும் மேலாக கெடாமல் இருக்கும் என்பது உண்மை தான். ஆனால் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் உடல்களுக்கு விசேட சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு உடல் கெடாமல் பேணப்படும் என கூறியுள்ளார். மேலும் மகாராணியாரின் உடலைப் பராமரிப்பதற்கும் கெடாமல் பேணுவதற்கும் செலவுகள் தொடர்பில் எவரும் கண்டு கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமின்றி, எம்பாமிங் சிகிச்சை என்பது நீண்ட காலமாக ராஜகுடும்பத்தினரால் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும்.
அதாவது உடல் கெடாமல் இருக்க அல்லது கால தாமதம் ஏற்படுவதற்கான திராவகத்தை உடலில் செலுத்துவது. அவ்வாறான சிகிச்சையில் மகாராணியாரின் உடல் இரண்டு வாரம் வரையில் புதுப் பொலிவுடன் காணப்படும் என்கிறார். இதனை தொடர்ந்து வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்விக்கும் ஏற்பாடுகளும் மகாராணியாரின் சவப்பெட்டிக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எலிசபெத் மகாராணியாரின் தந்தையான ஆறாவது ஜார்ஜ் மன்னருக்கும் எம்பாமிங் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விக்டோரியா ராணியார் மட்டும் அவ்வாறான சிகிச்சை ஏதும் தமக்கு வேண்டாம் என மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இது மட்டுமின்றி, விக்டோரியா மகாராணியாரின் உடல் நீண்ட நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கும் வைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.