நடைபெற்ற விண்வெளி தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சிரியா நாட்டின் மீது கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்த போரானது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த நாட்டில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இது குறித்து சிரியாவின் சனா என்ற செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இஸ்ரேல் சிரியா நாட்டிலுள்ள பல பகுதிகளை இலக்காகக் கொண்டு வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்து தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது என அதில் கூறியுள்ளனர்.