மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கேரள உயர் நீதிமன்றம் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை விதித்துள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நபர் 13 வயது நிரம்பிய தனது மகளை இரண்டு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. பள்ளியில் அளிக்கப்பட்ட ஆலோசனையின் போது தனக்கு நேர்ந்த அவலத்தை சிறுமி தெரிவித்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரியின் அடிப்படையில் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மாணவியின் தந்தைக்கு சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.