தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவரது மகன் லோகநாதன் பூண்டியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். லோகநாதன் சில தினங்களாக பணிக்கு சரியாக செல்லாமல் தனது நண்பர்களுடன் தேவை இல்லாமல் ஊர் சுற்றி திரிந்து உள்ளார்.
இதனால் கோபம் கொண்ட தந்தை கந்தசாமி லோகநாதனை கண்டித்துள்ளார். தந்தை கண்டித்ததை தொடர்ந்து மனவேதனையில் இருந்த லோகநாதன் நேற்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.