உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டின் முன் அமர்ந்திருந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பீரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் முன்பு ஒரு சிறுமி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த சலீமுதின் மற்றும் ஆசிப் என்கின்ற இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பலத்த காயமடைந்த சிறுமி அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த நபர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் முன்பே புகார் அளிக்கப்பட்டுள்ளது . இருப்பினும் அதில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியுடன் இருந்ததற்காக காவல் அதிகாரி சுனில் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.