சைவ உணவிற்கு ஏற்ற கூழ் வத்தல்.. தனி ருசி..!!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
ஜவ்வரிசி – ஒரு கையளவு
சீரகம் – 2 டீஸ்பூன்
செய்முறை:
பச்சரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள், ஜவ்வரிசி 1 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின்னர் அதன் கூட மிளகாய் 3 போட்டும் அரைத்து மாவாக எடுத்து கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வைவேண்டும். அவ்வாறு தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் சீரகம் மற்றும் உப்பு போடவேண்டும்.
நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை கொதித்து வரும் தண்ணீரில் கொட்டி, மிதமான அடுப்பு சூட்டில் அடிபிடிக்காமலும், கட்டி, கட்டியா ஆகாத மாதிரியும் மாவு கிளறவேண்டும். மாவு அந்த தண்ணீரின் சூட்டில் வெந்து வரும்.
வெந்து வரும் பொழுது ஒரு கப் அரிசி மாவு 4 கப் ஆகா உயரும். மாவு ரொம்ப கெட்டியான பதத்திற்கு வந்த உடன், அதை நாம் ஊற்றி வெயிலில் காயவைக்க வேண்டும்.
வத்தல் காய்ஞ்சதும் அதை பக்குவமாக எடுக்க வேண்டும். அவை:
வத்தல் ஊற்றியிருக்கும் துணியின் பின் புறம் தண்ணீர் தொளித்து எடுங்கள், வத்தல் உடையாமல் அழகாக வரும். அதன் பின் மறுபடியும் வெயிலில் வத்தலை உலர்த்தி எடுத்த பிறகு தான், வத்தலை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
அனைத்து சைவ குழம்பு வச்சி சாப்பிடும்பொழுதும் இந்த வத்தலை பொரித்து சாப்பிடலாம். பொரிக்கும் பொழுது ஒரு மனம் வருமே ஆஹா.. சாப்பிடும் பொழுதும் தனி ருசி…