இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி,கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானதையடுத்து வரவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வரவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கிரிக் பஸ் (Cricbuzz) இன் அறிக்கையின்படி, செப்டம்பர் 20, செவ்வாய்கிழமை நடைபெறவிருக்கும் முதல் டி20 க்கு கேப்டன் ரோகித் சர்மா உட்பட அனைத்து வீரர்களும் வந்துள்ள நிலையில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷமி மொஹாலிக்கு வரவில்லை. பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் முகமது ஷமி விளையாடமாட்டார் என்பது உறுதியாகிறது. 32 வயதான ஷமி தென்னாப்பிரிக்கா – இந்தியா சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு விளையாடுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
டி 20 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாத முகமது ஷமி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில், நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவுக்காக டி 20 ஐ விளையாடுவதற்கான அணியில் இடம் பெற்ற நிலையில், கொரோனாவால் விளையாட முடியாமல் போனது கவலை தரும் விஷயமாக இருக்கிறது.
ஷமி கடைசியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2021ல் நடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். அதன்பின் ஐபிஎல் தவிர எதிலும் ஆடவில்லை. டி 20 அணியில் 10 மாதங்கள் இல்லாதது குறித்த விமர்சனங்களுக்குப் பிறகு, உலக கோப்பை டி20 அணிக்கு காத்திருப்பு வீரராக பெயரிடப்பட்ட முகமது ஷமி, துரதிர்ஷ்டவசமாக கோவிட் பாசிட்டிவ் சோதனை உறுதி செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி 20 ஆட்டங்களைத் தவறவிடுவார். இதனால் ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர்கூறியதாவது, ஷமிக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டது. உமேஷ் யாதவை அணியில் சேருமாறு கூறியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் இங்கிலாந்து கவுண்டி அணியான Middlesex அணிக்காக ஆடும் போது உமேஷ் யாதவுக்கு தொடை தசை பிடிப்பு காயம் ஏற்பட்டதை அடுத்து, பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வில் இருந்தார். தற்போது அவருக்கு காயம் குணமடைந்ததாக தெரிகிறது.
முகமது ஷமிக்கு அறிகுறிகள் லேசானதா அல்லது தீவிரமானதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தென்னாப்பிரிக்கா எதிரான மூன்று டி20 போட்டிகளில் ஷமி பங்கேற்பது, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்ட பிறகு மருத்துவக் குழுவால் முடிவு எடுக்கப்படும். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 25-ம் தேதிகளிலும் விளையாடுகிறது.
முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆசிய கோப்பையில் இந்தியாவின் மோசமான ஆட்டத்தின் போது ஷமிக்கு ஆதரவாக குரல்களில் எழுப்பினார். முகமது ஷமி போன்ற ஒருவர் வீட்டில் அமர்ந்திருப்பது என்னை குழப்புகிறது. ஐபிஎல்லுக்குப் பிறகு அவர் அணியில் சேர்க்கப்படவில்லை, ”என்றுஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூறினார்.
ஷமி கடைசியாக கடந்த நவம்பர் மாதம் இந்தியாவுக்காக டி20 ஐ விளையாடினார். ஷமி 2022 இல் 16 ஐபிஎல் போட்டிகளில் இருந்து 20 விக்கெட்டுகளை குஜராத் லயன்ஸ் அணிக்காக சராசரியாக 24.40 மற்றும் ஒரு ஓவருக்கு 8 என்ற எகானமி ரேட் என்ற கணக்கில் எடுத்தார்.ஷமி 2022 ஐபிஎல்லில் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை எடுத்தார், 6.62 என்ற எகானமி ரேட்டில் 11 விக்கெட்டுகளை எடுத்தார்.
அக்டோபர் 4-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்குப் பிறகு, இந்திய அணி அக்டோபர் 6-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளது. ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திரா சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா அணி:
ஆரோன் பின்ச் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், டேனியல் சாம்ஸ், சீன் அபோட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா, நாதன் எல்லிஸ்.