Categories
தேசிய செய்திகள்

காதலியின் கண் முன்னே நடந்த அசிங்கம்….. மன உளைச்சலுக்கு ஆளான காதலன்….. கடைசியில் நேர்ந்த பரிதாபம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் வசித்து வந்தவர் பிரதீக் சந்தோஷ் கூட்வால். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அதே பெண்ணை பிரதாமேஷ் மகது பதாரே என்ற மற்றொரு நபரும் காதலித்துள்ளார். இந்நிலையில், காதலியின் கண் முன்னே சந்தோஷை, மகது அடித்து, தாக்கியுள்ளார்.

இதனால், சந்தோஷ் மன உளைச்சலுக்கு ஆளானார். இதன்பின் கடந்த மே மாதம் 25-ந்தேதி சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் ஆனால், அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதன்பின்னர் சில நாட்களுக்கு முன்பு பிரதீக் சந்தோஷின் தந்தைக்கு உண்மை விவரம் பற்றி தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர் போசாரி காவல் நிலையத்திற்கு சென்று இதுபற்றி புகாரளித்துள்ளார். தற்கொலை செய்ய தூண்டிய குற்றத்திற்காக மகது மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |