நடிகை ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக பல படங்களிலும் நடித்து வருகிறார். ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா உள்ளிட்ட பல படங்கள் இதில் அடங்கும். குறிப்பாக இவர் நடிக்கும் சந்திரமுகி 2 அதிக எதிர்பார்ப்புககுள்ளானதாக உள்ளது. இதன் முதல் கட்டப்படிப்பு முடிந்தவுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். நடிப்புக்கு இடையில் லாரன்ஸ் தான் தொடங்கியுள்ள அறக்கட்டளை ஏழை எளிய மாணவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுவனின் காலில் விழுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, நடிகர் லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் ஹீரோ, அப்படிப்பட்டவர்கள் என் காலில் விழும்போது அவர்களின் குழந்தைகள் கண்கலங்குவதை பார்க்கிறேன். எனவே, இனி யாருக்கு உதவி செய்தாலும், அவர்களின் காலை நான்தான் தொட்டு வணங்குவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.