Categories
தேசிய செய்திகள்

ஹெல்மெட் இருந்தா மட்டும் போதாது பாஸ்….. இதுவும் வேணும்….. அக்டோபர் முதல் புதிய கெடுபுடி…..!!

இனி இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பு கருதி ஒரு சில பொருத்தி இருந்தால் மட்டுமே வாகனம்  ஓட்ட அனுமதிக்க முடியும் என்ற புதிய விதிமுறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

வருடந்தோறும் தமிழகத்தில் சாலை விபத்தில் பலியாவோரின் எண்ணிக்கையை  குறைக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஹெல்மட் சீட் பெல்ட் உள்ளிட்டவற்றை அணியாதவர்களுக்கும், சிக்னலில்  நிறுத்தாமல் செல்லுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட சாலை விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,

பைக் ஓட்டும் நபருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது  போல், பைக்கிலும் குறிப்பிட்ட பொருள்கள் இருக்கவேண்டுமென்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவர் பிடிக்கும் வகையில் கைப்பிடி கண்டிப்பாக இருக்க வேண்டும். கால் வைப்பதற்கு வசதியாக புட்பிரின்ட் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஏனெனில் சௌகரியமாக உட்கார்ந்து சென்றால் தான் விபத்தின்போது பெரும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்ற நோக்கத்தில் இது அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களின் புடவை துப்பட்டா உள்ளிட்டவை டயரில் சிக்காமல் இருக்க பாதுகாப்பு டிஸ்க் அமைப்பை இருபுறமும் கட்டாயம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையாவும் வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.

Categories

Tech |