தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 36 முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் 37 ஆவது மெகா தடுப்பூசி முகாம் தமிழக முழுவதும் 50,000 இடங்களில் இன்று நடைபெறுகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 2000 இடங்களில் முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும் சுகாதாரம்,முன் கால பணியாளர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. வருகின்ற 30ஆம் தேதியுடன் பூஸ்டர் இலவச தடுப்பூசி நிறைவடைகிறது.எனவே அனைவரும் விரைவாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த வாய்ப்பை தவறவிடாமல் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.