தனது அக்கவுண்டில் தவறுதலாக விழுந்த 11,677 கோடி பணம் மூலம், ஒருவர் 5 லட்சம் சம்பாதித்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த ரமேஷ் சாகர். இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார் .இந்த நிலையில் அவருடைய பங்குச்சந்தை முதலீட்டுக்கான டீமேட் கணக்கில், ஜூலை 26ஆம் தேதி தொழில்நுட்ப தவறால் 11.677 கோடி வரவு வைக்கப்பட்டது. இதை கண்ட அவர் சற்றும் பதற்றப்படாமல், இந்தப் பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? என்பது குறித்து அவர் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை.
உடனே அதிலிருந்து இரண்டு கோடி ரூபாய் எடுத்து பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். அந்த முதலீடு வழியாக அதே நாளில் 5 லட்ச ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளார். இதற்கு இடையில் இரவு 8 மணிக்கு அவருடைய கணக்கிலிருந்து பணத்தை வங்கி திரும்ப பெற்றுவிட்டது. மேலும் தொழில்நுட்ப காரணமாக இப்படி நிகழ்ந்து விட்டதாக கூறி வங்கி அவருக்கு தகவல் தெரிவித்தது. கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் 11,677 கோடி ரமேஷ் வங்கி கணக்கில் இருந்துள்ளது.